வாகன ஓட்டிகளின் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு! 3 மாதம் தான் கெடு... லைசன்ஸ் ரத்து! விரைவில் அமல்!
Traffic police fine issue central Govt
போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான நடவடிக்கை – அபராதம் செலுத்தாவிட்டால் உரிமம் ரத்து!
மத்திய அரசு போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 3 மாதங்களுக்குள் விதிக்கப்பட்ட அபராதம் செலுத்தாதவைகளுக்கு ஓட்டுநர் உரிமம் (DL) ரத்து செய்யப்படும் புதிய விதிகள் விரைவில் அமலாகும்.
விதிமீறல்களுக்கு இ-செல்லான்
* சிவப்பு சிக்னல் கடக்குதல்,
* அதிக வேகத்தில் செல்லுதல்,
* மோசமான முறையில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களுக்கு இ-செல்லான் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பலர் அபராதத்தை உடனே செலுத்தாமல் ஒதுக்கிவைக்கிறார்கள் என்பதால், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கிறது.
புதிய விதிகள்:
* இ-செல்லான் 3 மாதங்களில் செலுத்தாவிட்டால் – ஓட்டுநர் உரிமம் (DL) ரத்து.
* ஒரே நிதியாண்டில் 3 இ-செல்லான் கிடைத்தால் – 3 மாதங்கள் உரிமம் பறிக்கப்படும்.
* 2 இ-செல்லான் உள்ளவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்கும்.
* இ-செல்லான் 3 நாள்களுக்குள் அனுப்பப்படும், 30 நாளில் அபராதம் செலுத்த வேண்டும்.
* 90 நாட்களுக்கு மேல் செலுத்தவில்லை என்றால் DL / RC ரத்து செய்யப்படும்.
இ-செல்லான் வசூலான மாநிலங்கள்:
* மகாராஷ்டிரம், ஹரியானா, ராஜஸ்தான், பிகார், எம்.பி – 62-76%
* தமிழகம், உ.பி, ஒடிசா – 27-29%
* கர்நாடகா – 21%
* தில்லி – 14% மட்டுமே
English Summary
Traffic police fine issue central Govt