வாணியம்பாடியில் சோகம் : அரசுப் பேருந்து மோதி ஒப்பந்த பணியாளர் சம்பவ இடத்திலேயே பலி! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடி அருகே, அரசுப் பேருந்து மோதியதில் சாலை பராமரிப்பு ஒப்பந்த பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவர் சாலை பராமரிப்பு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், ஹரி இன்று வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள பெங்களுார் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்துள்ளார். அப்போது, ஓசூரிலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஹரி மீது மோதியதில், அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் போலீசார், ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அரசு பேருந்தை சிறைபிடித்து, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in Vaniyambadi A government bus collided with a contract worker who died on the spot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->