தாறுமாறாக சிதறிக் கிடக்கும் ரயில் பெட்டிகள்!...இந்த 18 ரயில்கள் அதிரடி ரத்து! - Seithipunal
Seithipunal


பாக்மதி விரைவு ரயில் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு  சென்றுகொண்டிருந்தது. தொடர்ந்து அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையியில்,  சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விபத்தில்  19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளதால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தெற்குரயில்வே தெரிவித்துள்ளதாவது, கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  அந்த வகையில்,  சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படும் என்றும், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்இஎம்யூ ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதே போல், சூளூர்பேட்லை நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யூ ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train coaches scattered randomly these 18 trains are canceled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->