தென்காசியில் ரயில் கவிழ்ப்பு?...பயங்கர சத்தத்துடன் தெறித்து ஓடிய கற்கள்!....பயணிகள் நிலை? - Seithipunal
Seithipunal


செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்  செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து இரவு 7:10 மணி அளவில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் - பாம்புகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்த போது தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த கல் மீது ரயில் மோதியதில் பலத்த சத்தத்துடன் இன்ஜினின் முன் பக்க இரும்பு பேனல் சேதமடைந்தது.

இது குறித்து ரயிலை இயக்கிய பெண் லோகோ பைலட் சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு அளித்த  தகவலின் பேரில், ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த கல் துண்டுகளை சேகரித்து, பின்னர் தண்டவாளத்தை ஆய்வு செய்து அடுத்த ரயில் அவ்வழியாக செல்ல அனுமதித்தனர்.

மேலும் மாலை 4:20 மணிக்கு இவ்வழியாக குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றதாக கூறப்படும் நிலையில், அதற்கு பின்னர் தான்  தண்டவாளத்தில் யாரோ கல்லை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில்  சிறுவர்கள் யாரும்  தண்டவாளத்தில் கல்லை வைத்தனரா அல்லது ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்ற கோணத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train derailment in Tenkasi stones splattered with terrible noise passengers condition


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->