பயிற்சி காவலர் தற்கொலை.. தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரை சேர்ந்தவர் குமார் . இவர் திருச்சி காவலர் பயிற்சி முகாமில் கடந்த மாதம் 13ம் தேதி முதல் பயிற்சி பெற்றுவந்துள்ளார். தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள பாத்திர குடோனில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலைக்கான  காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Training Police Committed Suicide In Thanajavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->