தென்காசி : கருப்பு உடை அணிந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கைகள்.!! - Seithipunal
Seithipunal


தென்காசியில் திருநங்கைகள் கருப்பு உடை அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “நாங்கள் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு என்று தனியாக சொந்த வீடு எதுவும் கிடையாது.

அதனால், எங்களுக்கு சொந்தமாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் அல்லது சமூக நலத்துறை சார்பில் மானிய கடன் பெற விண்ணப்பித்தாலும் ஒன்று இரண்டு நபர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

தென்காசியில் எங்களுக்கு கைத்தொழில் சம்பந்தமான எந்தவித பயிற்சியும் இதுவரைக்கும் நடைபெறவில்லை, தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை திருநங்கைகளுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை. தனியாக நடந்து சென்றாலும் கூட்டமாக சென்றாலும் தவறு செய்யாமலே காவல்துறையினர் தண்டிக்கின்றனர். 

பொது இடங்களில் ஒட்டு சிலரால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலையும் ஏற்படுகிறது. ஆகவே, எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trans gender pettition to colletor in tenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->