#BigBreaking: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம்! புதிய தலைமைச் செயலாளர் இவர்தனா?! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்"

தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் முதல் தலைவராக (2019-ம் ஆண்டு) முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். 

கே.ஞானதேசிகன் பதவிக் காலம் கடந்த பிப்.10-ம் தேதி முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்வு சேய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. 

கடந்த ஜூலை மாதம் இக்குழு அளித்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.

"சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ்"

ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் வரை உள்ள நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம் துணை ஆட்சியராக கடந்த 1989 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா, 2017-ல் மத்திய அரசுப் பணி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர், தலைமைச் செயலர் பணிகளை செய்துள்ளார். 
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transfer Chief Secretary ShivDasMeena Muruganantham IAS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->