பணிக்கு வராத ஊழியர்கள் - அதிரடி காட்டும் போக்குவரத்து துறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று முதல் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில், பெரும்பாலான தொழிலாளர்களை கொண்ட தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் பங்கேற்கவில்லை. 

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தொடர்பான விவரங்களை சேகரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதன் படி பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport department count Absentee employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->