மகளிர் இலவச பயணத்திற்கு பணம் பெற உத்தரவா.? போக்குவரத்து துறை விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் மற்றும் பிற ஆண் பயணிகள் இழிவாக நடத்துவது அன்றாடம் தொடர்ந்து வரும் ஒரு விஷயம்தான். 

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் தானே பயணிக்கிறீர் என்று ஒரு பெண் பயணியை பார்த்து கேட்டது வீடியோவாக பரவி சச்சையானது. இதனை தொடர்ந்து தற்போது இலவசத்தில் பயணிக்க மாட்டேன் என்று பெண்கள் சபதம் எடுத்து பேருந்துகளில் கட்டணம் கொடுத்து பயணச்சீட்டு பெறுகிறார்கள். 

இந்த நிலையில், தற்போது அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டை பணம் கொடுத்து தான் பயணம் செய்வேன் என ஏதாவது பெண்கள் விருப்பப்பட்டால் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுங்கள் என போக்குவரத்து துறை அனைத்து நடத்துனர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக தகவல் பரவியது.

இந்த நிலையில், இது தவறான தகவல் இதுபோல எந்த உத்தரவும் போக்குவரத்து துறை பிறப்பிக்கவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மகளிர் விரும்பினால், பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என வாட்ஸப்பில் வரும் தகவல் உண்மை இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport department explained that whatsp rumour about free ticket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->