முதுமலை :: புலி தாக்கி பழங்குடியின பெண் பலி.! அச்சத்தில் அப்பகுதி மக்கள்.!
Tribal woman killed in tiger attack in mudumalai
நீலகிரி மாவட்டம் முதுமலையில் புலி தாக்கி பழங்குடியின பெண் உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாரி (63) நேற்று வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால், அப்போ புதிய சேர்ந்தவர்கள் வனப்பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இன்று அதிகாலை ஒருவர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பெண்ணின் உடலை பார்த்த போது அது மாயமான மாரி என்பது தெரிய வந்தது.
மேலும் அவரது உடலில் புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்ததால் அவர் புலி தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரது உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் பகுதி மக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Tribal woman killed in tiger attack in mudumalai