அதிக விலை.. தரமற்ற உணவு.. நெடுஞ்சாலை ஓட்டல்களின் அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் பகுதியில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பயண வழி உணவகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டல்களில் அதிக விலைக்கு மிகவும் தரம் இல்லாத உணவுகள் விற்க்கப்பட்டு வந்த நிலையில் குறைந்த விலையில் தரமான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது.

இருப்பினும், தற்போது அரசு போக்குவரத்து கழகத்தின் நிதி சுமை கூடியுள்ளது. இதனை காட்டி தனியாரிடமே தற்போது இந்த உணவகத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது ஹோட்டலின் நோக்கமே மாறிவிட்டது. 

அதிக விலையில் தரமற்ற உணவு விற்கப்பட்டு வருகின்றது. மேலும் சுகாதாரமற்ற கழிவறை, பழுதடைந்த சாலைகள், வழிந்தோடும் கழிவுநீர் மற்றும் தரமற்ற உணவு என்று மோசமான நிலையில் உணவகம் இருக்கிறது. 

அத்துடன் தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரச்சனையில் அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Chennai highway food problems


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->