திருச்சி | வீட்டில் ஆள் இருந்தபோதே திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பல்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


தொட்டியம் அருகே வீட்டின் பின்புற கதவை உடைத்து பத்தரை சவரன் தங்க நகைகளை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேறி வருகின்றனர்:

திருச்சி மாவட்டம்: தொட்டியம் அருகே நத்தம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி சுமதி (வயது 45). ஏழு ஆண்டுக்கு முன் செல்லதுரை இறந்துவிட்டார். சுமதி விவசாய கூலி வேலை செய்பவர். 

இவருக்கு சரவணீஸ்வரன் என்ற மகனும், சுப்ரஜா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குளித்தலையில் உள்ள அவரது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சுமதி அங்கு சென்றுள்ளார். 

அப்போது வீட்டில் சுமதியின் மகள் மற்றும் மகன் இருவரும் தனியாக இருந்துள்ள சூழ்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் கதவை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்து பத்தரை சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் போன்றவற்றை திருடியுள்ளனர். 

அத்தோடு ஆதார் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் வைத்திருந்த பைகளையும் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தூக்கி எறிந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து சுமதி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில், காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy house broken stolen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->