திருப்பதி லட்டு விவகாரம்: ஆதாரம் எங்கே? குட்டு வைத்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பாக, பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள், "விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களின் அறிக்கை தெளிவில்லாமல் உள்ளது. இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றால், பத்திரிகைகளுக்கு ஏன் செல்ல வேண்டும்?

திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வந்த நிலையில், அதனை செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், கலப்பட நெய் தான் பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதி செய்து விட்டீர்களா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆந்திர மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்கான விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து நீதிபதிகள், கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான முழுமையான ஆதாரம் இல்லை என்று கூறுகிறீர்கள். சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவுகள் வெளியாகும் முன்பே ஊடகத்திடம் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் கலக்கப்பட்டது என்று அர்த்தமாகாது. நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வறிக்கையில் உறுதியாக கூறப்படவில்லை. 

சோயாபீன் அல்லது தேங்காய் எண்ணெயாக கூட அது இருக்கலாம் என்று ஆய்வு ஆய்வக அறிக்கை தெரிவிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்றும் திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு மற்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripathi Lattu issue case SC Condemn to Andhra Pradesh Govt And CM


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->