திமுக அரசு சரியான முறையில் கையாளாததால் வன்முறை, கலவரம் - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகாவில் 144 தடை உத்தரவை பிறப்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பு உள்ளார்.

தற்போது போராட்டக்காரர்களால் தாக்குதலுக்குள்ளான சக்தி மெட்ரிக் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குரலை செவிமடுத்து கேட்டு ஆரம்பத்திலேயே காவல்துறையினர் அக்கறையுடன் செயல்பட்டிருந்தால் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்காது.

இதன் பிறகும் பிரச்னையை மேலும் பெரிதாக்காமல் அங்கே அமைதி திரும்புவதற்கும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு ஒரு கணமும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran say kallakurichi issue now


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->