நான் ஒரு விவசாயி.. ஐயா நம்மாழ்வாரின் கனவை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.. டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


நம்மாழ்வார் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் ஏப்ரல் 6, 1938 ஆம் ஆண்டு பிறந்தார். 

இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். 

நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த பெருமகன், இளைஞர்களுக்கும் உழவுத்தொழிலின் மீது புது நம்பிக்கையை ஏற்படுத்திய இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் இன்று.

உலகிற்கு உணவு படைக்கிற ஒவ்வொருவரும்,  'நான் ஒரு விவசாயி' என்று பெருமிதம் கொள்ளத்தக்க சூழலை உருவாக்க வேண்டும் என்ற ஐயா நம்மாழ்வாரின் கனவை நனவாக்க இந்நாளில்  உறுதி ஏற்போம் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dinakaran Tweet for Nammalvar birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->