வெள்ளப்பெருக்கு - சுருளி, கும்பக்கரை அருவிகளில் குளிக்க தடை.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் பல்வேறு உள் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள்வருகை தந்து அருவியில் குளித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதேபோன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் மூன்றாவது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

turisters not allowed bothing to suruli and kumbakarai falls for flood


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->