விஜய்யின் வருகைக்காக தயாராகும் இடம் - காஞ்சிபுரத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு.!
tvk leader vijay visit paranthur airport protest peoples
பரந்தூர் விமான நிலையத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அதன் பின்னர் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து த.வெ.க தலைவர் விஜய் கட்சியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பரந்தூர் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவுள்ளார்.
இதற்காக அம்பேத்கர் சிலை அருகே, 5 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பார்வையிட்டார்.
English Summary
tvk leader vijay visit paranthur airport protest peoples