த.வெ.க மாநாடு: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! - Seithipunal
Seithipunal


விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை குறித்து பிரகடனம் செய்ய உள்ளார். 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் படை எடுத்து வருகின்றனர். 

நேற்று இரவு முதலே மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தொண்டர்கள் குவிய தொடங்கினர். இன்று காலை மாநாடு நுழைவாயில் திறக்கப்பட்டு, தொண்டர்கள் இருக்கையில் அமர தொடங்கிவிட்டனர்.

விக்கிரவாண்டி பகுதியில் காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. 

மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு காலை உணவு வழங்கப்படாத நிலையில், மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பை கருதி விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகளை திறக்க வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாநாட்டுக்கு மது அருந்திவிட்டு யாரும் வரக்கூடாது, அனுமதி கிடையாது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Manadu TASAMC closed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->