இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும்... இனிய பக்ரீத் வாழ்த்துகள்! த.வெ.க. தலைவர்.! - Seithipunal
Seithipunal


இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும். முக்கிய பண்டிகை பக்ரீத் இறைவனின் தூதரான இப்ராஹிமின் தியாகத்தை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 12 வது இஸ்லாமிய மதமான துல் ஹஜ்ஜின் 10 வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இந்த பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஆண்கள் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் விதமாக உலகம் எங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை தியாகத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

இந்த நன்னாளில் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK president Vijay wish happy eid Mubarak


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->