டாஸ்மாக்: குடும்பத்துடன் குடிக்கும் போராட்டம் அறிவித்த விஜய் கட்சி!
TVK Protest against TASMAC Salem Aathur
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயிலடி தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த பகுதியில், தனியார் மருத்துவமனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளிட்டவை உள்ளன. மது அருந்துவோர் மக்கள் முன்பு ரகளையில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர், கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் கடை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில், முதலில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். அதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம் நடத்துவோம்" என அக்கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
TVK Protest against TASMAC Salem Aathur