உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. கன்னியாகுமரில் அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


உதவி கேட்டு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை ஆபாசம் எடுத்து மிரட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம்,  இடைக்கோடு  பகுதியில் 19 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பெண்களிடம்  மாதசீட்டு நடத்தி வந்துள்ளார்.

இதில், அந்த பெண்ணுக்கு நஷ்டம் ஏற்படவே அந்த பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் சஜித் என்பவரிடம் உதவிக்கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதாக கூறி அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார்.

நாளடைவில் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகியவர் அந்த பெண்ணின் ஆபாச புகைபடம் எடுத்துள்ளார். அதனை காட்டி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணின் ஆபாச புகைபடங்களை தனது நண்பர்களும் பகிர்ந்துள்ளார்.

இதனை அடுத்து, அந்த நண்பர்கள் சிலர் அந்த பெண்ணை மிரட்ட தொடங்கியுள்ளனர். இதனால், பயந்து போன அந்த பெண் காவல்நிலையத்தில் புகார்    அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து, ராணுவ வீரர்களான சஜித், கிரிஷ், ஜாண் பிரிட்டோ ( 33 ),  லிபின் ஜான் ( 32)  ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகினறனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two arrested for sexually abusing woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->