2 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன உற்சவம் ஜனவரி 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் பிப்ரவரி 01-ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two district local holiday in tamilnadu for arudhra dharisanam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->