சேலத்தில் போலீசார் முன்பு தாக்கிக்கொண்ட கும்பல் - 3 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு.!! - Seithipunal
Seithipunal


சேலத்தில் போலீசார் முன்பு தாக்கிக்கொண்ட கும்பல் - 3 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இது மோதல் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. 

இந்தச் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்ததாவது: "நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டனர். 

அதைத் தொடர்ந்து ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மீண்டும் தகராறு செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் என்பவர் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்காகச் சென்றார். 

அப்போது, ஏற்கெனவே தகராறு செய்த நபர்கள் காவல் நிலையத்திற்கு வந்ததால் மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. போலீஸார் முன்னிலையில் இருதரப்பினரும் காவல் நிலைய வளாகத்திலேயே மீண்டும் தாக்கிக் கொண்டனர். 

இந்தத் தாக்குதலில் இரு தரப்பைச் சேர்ந்த இரண்டு பேர் மயங்கி விழுந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸாரும் நிலை தடுமாறினர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள ஐந்து பேரை போலீஸார் பவலைவீசித் தேடி வருகின்றனர்" என்றுத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two gang attack front of police officers in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->