இன்ஸ்டாகிராம் நண்பரை சந்திக்க வெளியூர் சென்ற சிறுமிகள்.!   - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த பதின்மூன்று வயது சிறுமிகள் 2 பேர் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.

அவர்கள் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இருவரையும் காணவில்லை. 

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவர்களை சுற்றியுள்ள பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.  இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
அந்த புகாரின் படி, சிறுமிகளை கண்டுபிடிப்பதற்கு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மாயமான சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் சிறுமிகளுடைய பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 

அந்த ஆய்வின்போது இன்ஸ்ட்ராகிராமில் தூத்துக்குடியை சேர்ந்த சிறுவன் ஒருவனுடன், இருவரும் பழகி வந்தது தெரியவந்தது. அதன் படி, சிறுமிகள் தூத்துக்குடிக்கு அந்த சிறுவனைப் பார்க்க சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர். 

இந்நிலையில், நேற்று இரவு அந்த சிறுமிகளில் ஒருவர் தனது தாயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தாங்கள் இருவரும் தூத்துக்குடியில் இருப்பதாகவும், தங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு உடனே இணைப்பை துண்டித்து விட்டார். சிறுமிகள் தொடர்பு கொண்ட தகவலை பெற்றோர்கள்  போலீசிடம் தெரிவித்தனர். 

அதன் பின்னர் போலீசார் அந்த செல்போன் எண்ணின் சிக்னலை ஆராய்ந்தபோது அந்த செல்போன் எண் தூத்துக்குடியில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி தலைமை காவலர் ஜோசுக்கு காரைக்குடி போலீசார் தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் படி, தூத்துக்குடி போலீசார் சிறுமிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமிகள் தூத்துக்குடியிலிருந்து சென்னை சாலையில் பயணம் செய்தது தெரியவந்தது.

உடனே விரைந்து சென்ற போலீசார் எட்டயபுரம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த சிறுமிகளை மீட்டனர். இதுகுறித்த தகவலை சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் காரைக்குடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் போலீசார் மற்றும் பெற்றோர்கள்  தூத்துக்குடிக்குச் சென்றனர். அங்கு சிறுமிகள் இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

மேலும், சிறுமிகளை சென்னைக்கு அழைத்து சென்ற சிறுவனையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். சிறுமிகள் காணாமல் போன விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, அவர்களை மீட்ட தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two girls going to thoothukudi for meet instagram boy friend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->