தமிழகத்தில் தொடரும் சாராய மரணங்கள்.. டாஸ்மாக் பாரில் மது அருந்திய இருவரும் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் படைவீட்டு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி மற்றும் ஹரிஹரன் என்ற விவேக் ஆகியோர் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கீழஆலங்கம் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை எண் 8123க்கு எதிரே உள்ள பாரில் சட்டவிரோதமாக இன்று காலை மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.

அப்பொழுது இருவரும் வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டதால் அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைக் கண்ட பாரின் உரிமையாளர் அவர்கள் குடித்த மதுபானம் பெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். 

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குப்புசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் ஹரிஹரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹரிஹரனும் சிகிச்சை பலனின்றி தற்பொழுது உயிரிழந்துள்ளார். இதனால் அரசு அனுமதி பெற்ற பாரில் கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி அருந்திய இருவரும் தற்பொழுது உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அருந்திய மதுபானம் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 23 பேர் தற்போது வரை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நிலையில் தற்பொழுது தஞ்சாவூரில் இருவர் பாரில் விற்கப்பட்ட மதுபானத்தை குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two people died after drinking alcohol in Tasmac bar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->