சீர்காழியில் முதியவரிடம் 12 லட்சம் பணம் பறித்த வாலிபர்கள் - வாகன சோதனையில் சிக்கிய அவலம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த முகமது மைதீன் வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துவிட்டு, வாரத்தில் ஒருநாள் பணத்தை வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், மைதீனிடம் 25 ஆண்டுகளாக வேலை செய்துவரும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், சீர்காழி கடைவீதியில் ரூ. 12 லட்சம் பணம் வசூலித்து விட்டு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், மாரியப்பனிடம் பணப்பையை பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து முகமது மைதீனுக்கு, மாரியப்பன் தகவல் தெரிவித்தாதையடுத்து, சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் படி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையே, போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரனை செய்தனர். அதில் வந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அவர்கள் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரேம்குமார், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த முகமது பாசித் என்பதும், இவர்கள்தான் சீர்காழியில் முதியவரிடம் வசூல் பணத்தை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து பணத்தையும், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for 12 lakhs money theft in seerkazhi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->