தேனி || கடனைத் திருப்பிக் கேட்ட ஆத்திரம் - கள்ளக்காதலனுடன் சேர்ந்த பெண் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மன்மதன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜெயதீபா என்ற பெண் முப்பது ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால், அவர் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மன்மதன் கடனை திருப்பிக் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைமந்த ஜெயதீபா, தனது கள்ளக்காதலனான முத்துமணி என்பவருடன் சேர்ந்து, வீட்டில் தனியாக இருந்த மன்மதனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அத்துடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் நகையையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மன்மதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for murder in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->