தி. மலையில் 239 கிராம் போதைப்பொருள் பறிமுதல் - விசாரணையில் சிக்கிய 2 ரஷ்யர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவது போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் ரஷியாவை சேர்ந்த இருவரை கைது செய்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அவர்களிடம் இருந்து 239 கிராம் அளவிலான டிஎம்டி, சைலோ, சைபின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடம் போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்தியதில், அமனிடா மஸ்காரியா, அயாஹூஸ்கா, கம்போ ஆகியவற்றை திருவண்ணாமலையில் திருவண்ணாமலையில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கும் கூட்டம் ஒன்றில் பயன்படுத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் ரிஷிகேஷ், மணாலி உள்ளிட்ட பகுதிகளிலும் இது போன்ற அயாஹூஸ்கா செர்மனி நிகழ்ச்சிகளை நடத்தியதும் தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் இரண்டு ரஷியர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two rasians arrested for drugs use in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->