சிவகாசி: திருடு போன 11 பைக்குகள்! டூவீலர் மெக்கானிக் கைது..!!
Two-wheeler mechanic arrested11 stolen bikes recovered
விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், டூவீலர் மெக்கானிக் பைக்குகளை திருடிய சம்பவம்... போலீசார் கைது...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், கடந்த மாதம் திருடு போனது. இது குறித்து பைக் உரிமையாளர் சிவகாசி போலீசாரிடம் புகார் அளித்தார். இப்புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சிவகாமி மீனாட்சி காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் மணிகண்டன் (37) என்பவர் பைக்கை திருடியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மணிகண்டன் மெக்கானிக் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 பைக்குகளை திருடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பைக்குகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
English Summary
Two-wheeler mechanic arrested11 stolen bikes recovered