திருவள்ளூர்.! இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக ஊழியர்களான ஸ்ரீநாத், நாகராஜ், குமரேசன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் நடைபெற இருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே திருப்பேர் கிராமத்தை சேர்ந்த சரத் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two wheelers accident in tiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->