இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பா.ஜ.க நிர்வாகி பரிதாப பலி.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். பா.ஜ.க மாவட்ட இளைஞரணி செயலாளரான இவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது முன்பு சென்று கொண்டிருந்த ஆட்டோவை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நரேஷ் மோதி உள்ளார். 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நரேஷை மீட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். 

ஆனால் நரேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இரு சக்கர வாகன விபத்தில் பா.ஜ.க நிர்வாகி உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two wheelers collided accident BJP executive die


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->