அலறும் கோவை.."ஒரே நாளில் 2 பெண்கள் பலி".. கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் நேற்று ஒரே நாளில் 5,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 32,814 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்  329 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மொத்தம் 1,703 பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அதேபோன்று கோவை பிஎன் புதூரை சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் இரு பெண்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two women died due to corona in Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->