பர்மா பாலம்... மரக்குடிலில் ஏறலாமா?... அழகான இடம்... உதயகிரிக் கோட்டை.!
udayagiri fort kanyakumari
கன்னியாகுமரிலிருந்து ஏறத்தாழ 33கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து ஏறத்தாழ 12கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இயற்கை அழகுகளைக் கொண்டுள்ள இடம் தான் உதயகிரிக் கோட்டை.

சிறப்புகள் :
உதயகிரி கோட்டை 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோட்டையைச் சுற்றிலும் 16 அடி உயர கருங்கல் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. துப்பாக்கிகள் வைப்பதற்காகவே இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை உருவான வரலாறு மிக சுவாரஸ்யமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.
இந்த கோட்டையின் உட்புறத்தில் உயரமான மலைக்குன்று ஒன்று அமைந்துள்ளது. கோட்டை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டதால் இதனை தில்லாணைக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கே பல்லுயிர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அதில் மான் பூங்கா, மயில்பூங்கா, காதற்பறவைகளும், கினி பன்றிகளும் போன்றவற்றை கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பர்மா பாலத்தில் நடத்தல், மரக் குடிலில் ஏறுதல் போன்றவையும் இங்கு அமைந்துள்ளன. இப்பூங்காவில் குடும்பத்துடன் வருவோர்களை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

உதயகிரி கோட்டையைச் சுற்றி வரும் போது நமக்கு ஒரு அமைதியான சூழல் உண்டாகும். இந்தக் கோட்டையில் ஒரு ரகசியமான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதை பத்மநாபபுரம் அரண்மனைக்கு செல்லும் வழியாக அமைந்துள்ளது.
English Summary
udayagiri fort kanyakumari