'பின்னணி பாடகி உயிரிழப்பு' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்! - Seithipunal
Seithipunal


இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நல குறைவால் நேற்று மாலை மரணம் அடைந்தார். 

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் மற்றும் பின்னணி பாடகி சகோதரி பவதாரிணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 

தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த இவரது மரணம் தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். 

இவருடைய மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். பவதாரிணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi Stalin condolences bavatharani passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->