முதல் நாள் முதல் கையெழுத்து..!! அமைச்சர் உதயநிதியின் அடுத்தடுத்து அதிரடி..!!
Udhayanidhi as minister came office and signed three files
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்காக ஒதுக்கப்பட்ட அமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த உதயநிதி மூன்று கோப்புகளில் கையெழுத்து உள்ளார்.
அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022-2023 ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டான கபடி மற்றும் சிலம்பாட்டத்தினை சேர்த்திடவும், முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே 10 விளையாட்டுகளில் மாநில போட்டிகள் நடத்தப்பட்டன.
தற்பொழுது பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய 16 பிரிவுகளில் போட்டி நடத்திடும் வகையில் ரூ.47,04,72,800 செலவில் முதல்வர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் நடத்திடவும், இதற்கான மாநில ஒருங்கிணைப்பு குழு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்திலும் குழு ஆகியவை அமைத்திடும் கோப்பில் கையெழுத்துள்ளார்.
அதேபோன்று நலிந்த நிலையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 02/03/2022 முதல் 01/08/2022 வரை மாதம் 3000 ரூபாய் வழங்கிடவும், 02/08/2022 முதல் ஆயுட்காலம் முடியும் வரை மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். முதல் கட்டமாக 9 விளையாட்டு வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணையை வழங்கினார்.
அதேபோன்று சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் பெரு நாட்டில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீட்டர் பெண்களுக்கான தனிப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி நிவேதிதா அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து உள்ளார்.
English Summary
Udhayanidhi as minister came office and signed three files