ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் உடல்களை தோண்டி எடுக்கும் பணியில் உக்ரைன் வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 6 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. இப்போரில் தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் படைகள் டொனெட்ஸ்க், இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் நகரங்களை கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட இஸியம் நகரில் ஆய்வு செய்தபோது வனப்பகுதியில் ஒரே இடத்தில் 440 உடல்கள் புதைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட நகரங்களில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உடல்கள் இன்னும் உள்ளன என்று உக்ரைன் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிரோன்கள் அல்லது ஆளில்லா விமானம் மூலம் வனப்பகுதியில் உள்ள பதுங்குகுழிகள் மற்றும் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் அவசர உக்ரைன் சேவை பணியாளர்கள் கையுறை மற்றும் வெள்ளை நிற உடைகள் அணிந்து புதைகுழியில் இருந்து உடல்களை மீட்டு வருகின்றனர்.

இதில் குழந்தைகள், பெரியவர்கள், ராணுவ வீரர்கள் என அனைவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ரஷ்யப்படைகளின் சித்திரவதை மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine soldiers digging up bodies from captured area


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->