பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதி.. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய திட்டவட்டம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் தனியார் பல்கலைக்கழக விழாவில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதி என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் "மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய கால அடிப்படையில் கட்டமைப்பு வசதி மேம்படுத்த அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் 150 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகள் அடுத்த சில ஆண்டுகளில் கட்டமைக்கப்படும்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் உறுதியாக அமைக்கப்படும். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையத்திற்கு எதிராக எழுந்திருக்கும் பிரச்சனைகளுக்கு மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும்.

மத்திய அரசின் பணி விமான நிலையங்களை அமைப்பது மட்டுமே. விமான நிலையம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு தான் செய்து கொடுக்க வேண்டும்" என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union minister jyotiraditya confirm airport will be set up at Parantur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->