மதுரை எய்ம்ஸ் கட்டுமான டெண்டர் எப்போது? மத்திய அமைச்சர் கொடுத்த அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் மத்திய அரசால் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையின் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

அப்போது மதுரை விமான நிலையம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  "மதுரை எய்ம்ஸ் மருத்துவனமாய் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும். கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வரும் ஜனவரி 2ம் தேதி விடப்படும். டெண்டர் விடப்பட்ட 3 ஆண்டுகளில் கட்டுமானம் முடிவடையும். தற்போது மருத்துவமனை கட்டுமான மதிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. புதிதாக பரவும் ஜெ.என்.1 கொரோனா கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதன் தாக்கமும் குறைவு தான்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister said Madurai AIIMS construction tender on Jan2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->