அடேங்கப்பா.. இதுவரை 1,00,699 பேர்‌ விண்ணப்பம்..!! பொறியியல் சேர மாணவர்கள்‌ ஆர்வம்.!! - Seithipunal
Seithipunal


பிளஸ் டூ மாணவர்கள் காண தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 6ம் தேதி வெளியான நிலையில் அன்றைய தினமே அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. 

கடந்த முறை பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த ஆண்டு அதிகப்படியான மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் ஜூன் 6-ம் தேதி வரை பொறியியல் மாணவர்கள் சேர்க்கை காண விண்ணப்பங்கள் பயப்படும் நிலையில் இன்றுவரை 1,00,699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

அவர்களின் 56,044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27,755 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர். இறுதி நாளான ஜூன் 6-ம் தேதிக்குள் சுமார் 2,50,000 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Until 100699 students applied for engineering courses


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->