தமிழாசிரியரிடம் பேசிய வைரமுத்துவின் வைரலாகும் பேச்சு...! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போத, கவிஞர் வைரமுத்து எழுதிய, 'ஓ என் சமகால தோழர்களே' என்ற கவிதைத் தொகுப்பு பற்றி அப்பள்ளி தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 

அதைப்பார்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மாணவர்களோடு வகுப்பறையில் அமர்ந்து இதனை கவனித்தார். பின்னர் அமைச்சர் தனது செல்போனில் கவிஞர் வைரமுத்துவை தொடர்பு கொண்டு தமிழ் ஆசிரியையிடம் பேச வைத்தார்.  தமிழ் ஆசிரியையிடம் பேசிய வைரமுத்து, "இரண்டு கண்கள் இல்லை என்றாலும், 20 நகக்கண்களும் நமக்கு உள்ளது என்று நம்பிக்கை வையுங்கள்" என்று ஆசிரியைக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். 

மேலும், ஆசிரியை தமிழ்ச்செல்வி வைரமுத்துவிடம் அவர் எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை ஆடியோ வடிவில் முழுமையாக கேட்டதாகவும், அவரது பாடல்கள் அனைத்து தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். இதைக் கேட்ட வைரமுத்து, அவருக்கு நன்றி தெரிவித்து அவரது பணி தொடர வாழ்த்தினார். இந்த உரையாடல் அங்கு இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vairamuthu vairal speach to tamil teacher


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->