வேன்-லாரி நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து: வெளி மாநில சுற்றுலா பயணிகள் பலி!
Van Lorry collision accident Out of state tourists killed
திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 1 வயது குழந்தை உள்பட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்காக ரயில் மூலம் நேற்று ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
அங்கிருந்து 2 வேன்கள் மூலம் தூத்துக்குடி வந்து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி புறப்பட்டனர். திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை இன்று இரவு 2.30 மணி அளவில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் எதிரில் வந்த டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமன், பார்வதி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ஒரு வயது குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இந்த விபத்தினால் 10கும் மேற்பட்டவர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளி மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
English Summary
Van Lorry collision accident Out of state tourists killed