3 ஆண்டுகளுக்குப் பிறகு வண்டலூர் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட வசதி! இன்று முதல் நடைமுறை!
vandalur zoo after 3 years starts see lions by vehicle
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவுக்கு ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கின்போது பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் 'லயன் சபாரி' நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் பூங்கா வழக்கம் போல் செயல்பட்டும் வாகனத்தில் சென்று சிங்கங்களை பார்க்கும் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் லயன் சபாரியை மீண்டும் தொடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏ.சி பேருந்துகள் வாங்கப்பட்டு சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு வண்டலூர் பூங்காவில் இன்று தொடங்கப்பட்டது.
இதனை வனத்துறை அமைச்சர் பூங்காவில் நடைபெற்ற வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியின் போது தொடங்கி வைத்தார்.
ஒரு பேருந்தில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்கும் வசதியுடன் உள்ளது. இதேபோல் நுழைவு சீட்டு பெற க்யூஆர் கோட் ஸ்கேனர் வசதி, 2 கவுண்டர்கள், உலக தரம் வாய்ந்த உணவகம், வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய மருத்துவமனை போன்றவற்றையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு வண்டலூர் பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
vandalur zoo after 3 years starts see lions by vehicle