வண்டலூர் உயிரியல் பூங்கா: கடந்த ஆண்டை விட அதிகமாக குவிந்த பார்வையாளர்கள்!  - Seithipunal
Seithipunal


வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார இறுதியில் விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வண்டலூர் பூங்காவில் குவிந்தனர். கடந்த 2 நாட்களில் வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது 21,000 பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகாரிக்கும். 

கிறிஸ்துமஸ் விடுமுறையான இன்று பார்வையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது, பார்வையாளர்கள் வண்டலூர் பூங்காவுக்கு வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கை விட அதிகமாக இருக்கும். 

இதே போல் புத்தாண்டு வார இறுதியிலும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vandalur Zoo More visitors than last year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->