வந்தவாசி | இறந்த குரங்கு, இளைஞர்கள் செய்த செயல்! பாராட்டும் கிராம மக்கள்!
Vandavasi dead monkey buried villagers
திருவண்ணாமலை, வந்தவாசி அடுத்துள்ள கிராம பகுதியில் வசித்து வரும் விநாயகம் என்பவரின் வீட்டின் முன்பு பெண் குரங்கு ஒன்று மூச்சு திணறியபடி அமர்ந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த அவர் குரங்குக்கு தண்ணீர் மற்றும் பழங்கள் கொடுத்தார். இருப்பினும் சிறிது நேரத்தில் குரங்கு பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இந்த தகவலை அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஓய்வு பெற்ற தாசில்தார், விலங்கு நல ஆர்வலர் உள்ளிட்ட இளைஞர்கள் இறந்த குரங்கிற்கு இறுதிச்சடங்கு செய்வதாக முடிவு செய்தனர்.
![](https://img.seithipunal.com/media/vanthavasi-2rzdq.jpg)
அதற்குள் குரங்கின் உடல் கெடாமல் இருக்க குளிரூட்டும் பெட்டியில் வைத்து பதப்படுத்தி அப்பகுதியில் இருந்த மக்கள் குரங்கின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மேளதாளம் முழங்க, வழிநெடுகிலும் மலர்கள் தூவி மனிதர்களை அடக்கம் செய்வது போல குரங்கின் உடலை தோளில் சுமந்து சென்று முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.
கிராம இளைஞர்களின் இந்த செயலை வந்தவாசி மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் குரங்கை புதைத்த இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் காட்டுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Vandavasi dead monkey buried villagers