மாநில கட்சியாக அங்கீகாரம்! தமிழகத்தில் இரு கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 

மற்ற 34 தொகுதிகளில் நான்காம் இடம் பிடித்துள்ள நாம் தமிழர் கட்சி மொத்தத்தில் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது. 

பொதுவாக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற மாநில கட்சியாக அங்கீகாரம் பெற 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். தற்போது நாம் தமிழர் கட்சி எட்டு சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளதால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறி உள்ளது.

இதேபோல் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே விசிக தனி சின்னத்தில் போட்டியிட்டதால் அக்கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் விசிக மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK and NTK EC Approved State Party


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->