விசிக நிர்வாகி கத்தியால் குத்திக் கொலை - திண்டுக்கல் அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகே உள்ள கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அகரமுத்து என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொறுப்பாளராக இருந்தார். அதுமட்டுமல்லாமல், இவர் பழனி சாலையில் உள்ள மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்தார். 

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் அங்குச்சாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த பொங்கல் விழாவில் இவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் ஆத்திரமடைந்த அங்குச்சாமி குடிபோதையில் அகரமுத்துவை குத்தி கொலை செய்தார். இதை தடுக்க வந்த அவரது அண்ணன் ஜெய்கணேசுக்கும் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அகரமுத்துவின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அங்குச்சாமி மற்றும் முத்தழகுபட்டியை சேர்ந்த செல்வம் மகன் ஷியாம் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். 

அப்போது, அங்குச்சாமி போலீசாரின் பிடியிலிருந்து தப்ப முயன்றதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck excuetive murder in dindukkal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->