ஆட்சியில் பங்கு வேண்டும்! வீடியோவை டெலிட் செய்துவிட்டு ஓடிய திருமாவளவன்?! அட்மின் மேல் பழி?! - Seithipunal
Seithipunal


"கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மனிதனுக்கும் அதிகாரம்" என்ற பெயரில் கடந்த காலத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ஒரு  கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன், ஆட்சியிலும் பங்கு, கூட்டணியிலும் பங்கு என்று பேசி இருந்தார். 

இந்நிலையில், இதுகுறித்த இந்த காணொளியை இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

பின்னர் அதனை டெலிட் செய்துவிட்டு, அதே காணொளியை "அதிகாரத்தில், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் வலியுறுத்தியது" என்று, புதிய பதிவு ஒண்மதிரை போட்டார்.

பின்னர் அந்த காணொளியையும் தற்போது திருமாவளவன் டெலிட் செய்து உள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், இந்த காணொளி குறித்து எனக்கு ஏதும் தெரியாது, அட்மின் போட்டு இருக்கலாம் என்று தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

திருமாவளவன் நீக்கிய அந்த காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan X Post Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->