காப்பாற்றப்படுவார்களா தூத்துக்குடி மீனவர்கள்?...10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை!...என்ன செய்யொபோகிறது இந்தியா? - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருவது வாடிக்கையாகி வரும்  நிலையில், இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி மகாராஜா, அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 20-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் சர்வதேச எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.


இதற்கிடையே  கடந்த வாரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் மீதமுள்ள 10 மீனவர்களை, நீதிமன்ற காவலில் வைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணை  நடைபெற்றது. இதில், 10 மீனவர்களில் 7 பேர் ஆஜராகினர். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தருவைகுளம் மீனவர்கள் 10 பேருக்கும் ரூ.3.5 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will Thoothukudi fishermen be saved 10 people fined Rs.3.5 crore and 6 months in jail What is India going to do


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->