ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


வீரபாண்டிய கட்டபொம்மன் :

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.

பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை.

1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்சன் தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார்.

ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வௌ;வேறு இடங்களுக்கு வரச் சொல்லிய ஜாக்சன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.

இந்த சந்திப்பின்போது வரி செலுத்துமாறு ஜாக்சன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள்.

இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன் என கம்பீரத்துடன் முழங்கிய இவர் 1799ஆம் ஆண்டு கயத்தாறில் அக்டோபர் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

veerapandiya kattabomman birthday 2022


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->