வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் மரணம்!
Vellaiyan death
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார். அவருக்கு வயது 76.
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், மருத்துவமனையில் அவ்வப்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 3-ம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் த.வெள்ளையன் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 5-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.